fbpx
RETamil Newsதமிழ்நாடு

புதுச்சேரியில் அதிமுக பிரமுகர் சந்துருஜி ஏடிஎம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்பு அம்பலம்

புதுச்சேரியில் ஏடிஎம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் சந்திருஜிக்கு சர்வதேச மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது.

புதுச்சேரியில் வங்கி கணக்கில் இருந்து போலி ATM கார்டுகள் மூலம் பணம் திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்திருஜி தொடர்ந்து தலைமறைவாக இருந்தார் கடந்த எண்பது நாட்கள் தேடுதலுக்கு பிறகு சிபிசிஐடி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

சந்தருவிடம் நடத்திய விசாரணையில் பேருந்து மூலமாகவே பல்வேறு நகரங்களுக்கு பயணித்துள்ளது உட்பட பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஏடிஎம் மோசடி வழக்கில் இதுவரை 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் வெகு நாட்களாக தலைமறைவாக இருந்த சந்துருஜி பெங்களூரு, சென்னை,பாம்பே என பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருந்தார்.

இந்நிலையில் நேற்று போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்து பாண்டிச்சேரி அழைத்துச் சென்றனர்.

 

அவரை இன்று பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த ஏடிஎம் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கா,ஸ்வீடன்,துபாய் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது மற்றும் அவருடன் நட்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close