fbpx
RETamil Newsஇந்தியாதமிழ்நாடு

இன்று பிற்பகல் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் பாய்கிறது….!

நிலவை தொடும் இந்தியாவின் இரண்டாவது முயற்சியான சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் இன்று செலுத்தப்பட உள்ளது. நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்கபகல் 2.40 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் கடந்த 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்த நிலையில், கடைசி கட்டத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

சந்திரயான்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவ ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது. 3850 கிலோ எடைகளுடன் கூடிய சந்திரயான்-2 விண்கலம் மழையில் நனைந்தாலும் பாதிப்பும் ஏதுமில்லா வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலத்திற்கான 20 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று மாலை தொடங்கியது. சந்திரயான் 2 திட்டத்தை செயல்படுத்த 978 கோடி ரூபாயை இந்தியா செலவழித்துள்ளது. சந்திரயான் -2 விண்கலம் 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து வரும் செப்டம்பர் 6 அல்லது 7ம் தேதிகளில் நிலவில் தரையிறங்கும்.

Related Articles

Back to top button
Close
Close