fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு!

டெல்லி:

ஜூன் 1ஆம் தேதி முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தனிநபர்கள் நடமாட்டத்திற்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தனிநபர் நடமாட்டத்திற்கான தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் இரவு ஒன்பது மணிவரை என தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நாளையுடன் ஊரடங்கு  முடிவடையும்  நிலையில் ஜூன் 30-ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டு  நெறிமுறைகளையும்  உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத இடங்களில் ஜூன் 1ஆம் தேதி முதல் புதிய தளர்வுகள் வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக ஜூன் 8ஆம் தேதி முதல் வழிப்பாட்டு தலங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

வெளியூர் பயணத்திற்கான தடைகள் அனைத்தையும் உள்துறை அமைச்சகம் நீக்குகிறது. இதற்காக எந்த வித அனுமதியையும் பெறத் தேவையில்லை.

ஜூன் 1-ஆம் தேதி இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தனிநபர்கள் வெளியே வர தடை விதிக்கப்படுகிறது.

அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே வரலாம் என புதிய தளர்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தனிநபர் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது கூடுதல் தளர்வு வழங்கபபட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

பள்ளித் திறப்பு பற்றி ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு (UNLOCK 1) என்ற தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close