fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

இந்தியா முழுவதும் CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து! ஆனால்?

டெல்லி:

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, 10ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, இதற்கு முன்னர் நடத்தப்பட்ட மூன்று  தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஜூலை 1 முதல் 15 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 12ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

கொரோனா வைரஸ்  கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் விருப்பம்  உள்ளவர்கள் மட்டும் தேர்வு எழுதலாம் என்றும் தெரிவித்தார்.

தேர்வு வேண்டாம் என முடிவெடுக்கும் மாணவர்களுக்கு  இதற்கு முன்பாக நடத்தப்பட்ட 3 தேர்வுகளின் மதிப்பெண்களை கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான மதிப்பெண் பட்டியல் வரும் ஜூலை 15ம் தேதி வெளியாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close