fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

எங்களுக்கு கோயம்பேடு சந்தை தான் வேணும்…! கோர்ட்டுக்கு போன வியாபாரிகள்

Case filed to open Koyambedu market

சென்னை: கோயம்பேடு சந்தையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணமாக அடையாளம் காட்டப்படுவது கோயம்பேடு சந்தை.

இதையடுத்து மார்க்கெட்டை மூடுவதாக தமிழக அரசு அறிவித்தது. பின்னர் திருமழிசையில் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடியை அரசு  தொடங்கியது.

இந் நிலையில், கோயம்பேடு சந்தையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்  என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுளளது. இது தொடர்பாக கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரேசன் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார்.

வழக்கை எடுத்துக் கொண்ட  உயர்நீதிமன்றம், சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்கு வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close