fbpx
RETamil Newsதமிழ்நாடு

தமிழகம் முழுவதும் நாளை செவ்வாய் கிழமை அரசு பேருந்து மற்றும் ஆட்டோக்கள் ஓடாது.

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்துக்கள் , ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மத்திய தொழில்சங்கங்கள் நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

சி.ஐ.டி.யூ.,ஏ.ஐ.டி.யு.சி ஆகிய சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்.பி.எப்., பாட்டாளி, விடுதலை சிறுத்தை, மறுமலர்ச்சி, தே.மு.தி.க போன்ற சங்கங்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் மலை 6 மணி வரை அரசுப்பேருந்துக்கள் , ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாமல் லோடு ஆட்டோ, ஒர்க் க்ஷாப் , டிரைவிங் ஸ்கூல் அன்று மோட்டார் சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து பொதுச்செயலாளர் கூறியதாவது;

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்துக்கள் , ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் ஆளும்கட்சி தொழில்சங்கங்கள் தவிர அனைத்து தொழில்சங்கங்களும் பங்கேற்கின்றனர்.

அனைத்து தொழில்சங்கங்கள் சார்பாக அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close