fbpx
Tamil Newsஉணவு

இன்றைய ஸ்பெஷல் – புதினா சட்னி ( வதக்காமல் அப்படியே செய்வது)

தேவையான பொருட்கள் ;

1. புதினா 1 கட்டு
2. சிறிய வெங்காயம் 2
3. பச்சை மிளகாய் 2
4. கொத்தமில்லி காம்பு சிறிது
5. கருவேப்பிலை ஒரு முட்டி அளவு
6. தேங்காய் 2 துண்டுகள்
7. இஞ்சி சிறிது
8. புளி ஒரு எலுமிச்சை அளவு
9. உப்பு தேவையானஅளவு

செய்முறை ;

புதினா சட்டினி என்றாலே எல்லாரும் வதக்கித்தான் செய்யனும் என்று சொல்வாங்க ஆனா அப்படி கிடையாது இந்த புதினா சட்டினி அப்படியே வாதக்காமல் செய்யனும் .

முதலில் புளியை சிறிது நேரத்துக்கு முன் நீரில் ஊறவைத்து கொள்ளவேண்டும்.பின்னர் மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கிய இஞ்சி , நறுக்கிய தேங்காய் , கொத்தமில்லி காம்பு , பச்சைமிளகாய் , நறுக்கிய வெங்காயம் 2 ,
ஊறவைத்த புளி தேவையானஅளவு உப்பு ஆகிவற்றை போட்டு இரண்டே சுற்று சுற்றிய பின் அதில் கிள்ளி வைத்த புதினா மற்றும் கருவேப்பிலை அகியவற்றை போட்டு நைசாக அரைக்கவேண்டும்.

புதினா சட்னி தயார் ஆகிவிட்டது .

இவ்வாறு அனைத்தையும் வதக்காமல் செய்வதால் முழுமையான சத்துக்கள் நம் உடலுக்குள் சென்றடையும் ,
அவ்வாறில்லாமல் அனைத்தையும் வதக்கி செய்தால் அதில் உள்ள சத்துக்கள் குறைந்துவிடும்.

Related Articles

Back to top button
Close
Close