fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

9 மாவட்ட மக்களே..! ரெடியாக இருங்க..! மழை வெளுக்க போகுதாம்…!

9 Districts receive huge rain says Chennai metrology

சென்னை: தென்மேற்கு பருவமழை வரும் 16ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்தமான், நிகோபார் பகுதியில் வரும் 16ம் தேதி தென்மேற்கு பருவக்காற்று வீச வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை என 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர், திருத்தணியில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். குறிப்பாகச் சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

அந்தமான் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close