fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி!

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கல் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசெர்வ் போலீஸ் படை வீரர்கள் சி.ஆர்.பி.எப் 2500 பேர் 70 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் சென்ற 2 பஸ்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த வாகனத்தை கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர்.

இவ்வாறு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் மரணமடைந்துள்ளார். இந்த செய்தி அவர்களின் குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


துணை முதலமைச்சர் கண்டனம்;

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு தமிழக
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close