ChennaiRETamil Newsதமிழ்நாடு
6 மாவட்ட மக்களே..! ரெடியாக இருங்க…! மழை வெளுக்க போகுதாம்…!
6 districts get rain says Metrology

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மதுரை, தேனி, தென்காசி, விருது நகர், ராமநாதபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. நெல்லை, சேலம், கரூர், தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெயிலின் தாக்கம் 37 டிகிரி வரை இருக்கும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.















