fbpx
RETamil News

அல்பேனியா நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 6.4-ஆக பதிவு

அல்பேனியா நாட்டில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 4 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது இது ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்தபடி தெருக்களில் குவிந்தனர்.

இவ்வாறு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது அல்பேனியா நாட்டின் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்படாத அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்ததாக ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது அல்பேனிய நாட்டின் ஹிஜாக்கிலிருந்து வடமேற்கில் 10 கி.மீ தொலைவிலும் 10 கி.மீ ஆழத்திழும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபோன்றே கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி அல்பேனியா நாட்டில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் சுமார் 500 வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close