fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

இன்றைக்கும் 500ஐ கடந்த கொரோனா பாதிப்பு…! கலக்கத்தில் மக்கள்..!

580 corona cases today in tamilnadu

சென்னை: கொரோனா தொற்றுக்கு இன்றும் 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. இந் நிலையில் இன்று தமிழகத்தில் 580 பேருக்கு கொரோனா பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 5,409ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு அடைந்த 580 பேர்களில் சென்னையில் மட்டும் 316 பேர் உள்ளனர்.

அதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2644ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாக, அதன் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 14195 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2,02,436 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close