fbpx
GeneralRETamil Newsதமிழ்நாடு

கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரிக்கு 40 சதவீதம் வருவாய் குறைந்தது…! முதலமைச்சர் நாராயணசாமி!

40% Income less in puducherry

புதுச்சேரி:

கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரிக்கு 40 சதவீதம் வருவாய் குறைந்துள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நிதிநிலை குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி உள்ளதாவது:

கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரிக்கு 40 சதவீதம் வருமானம் குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு இழப்பீட்டை நான்கு மாதமாக தரவில்லை எனவும் 14 சதவீத இழப்பீடு தரவேண்டும் எனவும் 560 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

மேலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு 41 சதவீதம் வருவாய் தர கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதற்கு இதுவரை பதில் வரவில்லை. தற்போது 21 சதவீதம்தான் தருகிறார்கள்.

புதுச்சேரியில் 70 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 55 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர், புற்றுநோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், இதய நோய் என பல வியாதிகளில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள். அகில இந்திய அளவை விட குறைவு என்று அவர் கூறியுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close