குஜராத்தில் கல்லூரி மாணவனை சர்வ சாதாரணமாக கொலை செய்து விட்டு செல்லும் 3 பேர்
குஜராத்: கல்லூரி மாணவரை குஜராத்தின் பரபரப்பான சாலையில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் சர்வ சாதரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யும் காட்சி cctvல் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பவார் என்ற 19 வயது மாணவர் வீர் நர்மட் சவுத் குஜராத் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அவர் குஜராத் சூரத்தில உத்னா என்ற பகுதியில் நேற்று சனிக்கிழமை தான் வாங்கிய புதிய இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பவார் அருகே 3 பேர் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்து ஏதோ பேசிகொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக பவாரை குத்தினர்.
இதில் பவார் நிலைதடுமாறி சரிந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கொலை செய்து விட்டு அந்த மூன்று பேரும் சர்வசாதாரணமாக அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.
இந்த சம்பவத்தின் காட்சிகள் அருகே இருந்து சிசிடிவியில் பதிவாகியுள்ளது. போலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.