fbpx
RETamil Newsதமிழ்நாடு

25 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை : 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்தது

உலகின் வளர்ந்த மற்றும் வளரும் என அனைத்து நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1.50 லட்சத்திற்க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ள இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கவனம் காட்டி வருகின்றன.

இந்த கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் , ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா ? என்பதை அறிய செய்யப்படும் பரிசோதனைகளின் முடிவுகளை உடனடியாக தெரிந்துகொள்ள போதிய உபகரணங்கள் இந்தியாவில் இல்லை. அதனால் இந்த கொரோனா பரிசோதனை உபகரணங்களை வாங்குவதற்க்கு சீனாவிடம் இந்தியா ஆர்டர் கொடுத்தது.

இந்நிலையில் சீனாவிடம் இருந்து 3 நாட்களுக்கு முன் இந்த கருவிகள் இந்தியாவிற்கு வந்தடைந்தது. தமிழகத்திற்கு தேவையான 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் என்ற கொரோனா பரிசோதனை உபகரணங்கள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது. கொரோனா தொற்று தற்போது அதிகம் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் மூலம் கொரோனா சோதனை முடிவுகளை மிக விரைவாக அறிய முடியும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் இந்த துரித பரிசோதனை கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

அதன் அடிப்படையில், திருநெல்வேலி, கோவை, ஈரோடு, வேலூர், சேலம், மதுரை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களுக்கு தலா 1000 துரித பரிசோதனை கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் 1000 கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும் மீதம் உள்ள துரித பரிசோதனை கருவிகள் மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.அந்த கருவிகள் மூலம் , அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு துரித பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த துரித பரிசோதனை கருவியின் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை தொடங்கியது.

பின்னர் இந்த துரித பரிசோதனை முறை குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் ” டாக்டர் ஜெயந்தி கூறியதாவது;

” ரேபிட் டெஸ்ட் கிட்” என்ற துரித பரிசோதனை கருவியின் மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா ? இல்லையா? என்பதை விரைவில் கண்டறிய உதவும் கருவியாகும்.

இந்த துரித கருவியில் 2 குமிழ்கள் உள்ளன. இதில் ஒரு குமிழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபரின் விறல் நுனியில் இருந்து சேகரிக்கப்படும் ஒருதுளி இரத்தம் இடப்படுகிறது.இன்னொரு குமிழில் ‘கண்ட்ரோல் சோலியூஷன்” எனும் ஒரு திரவம் விடப்படுகிறது.

இந்த பரிசோதனை முடிவானது 25 நிமிடங்களிலேயே தெரிந்துவிடும்.

கருவியில் உள்ள திரையில் ஒரு கோடு வந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று இல்லை என அறியலாம். அப்படி இல்லாமல் இரண்டு கோடுகள் வந்தால் அந்த நபருக்கு கொரோனா இருக்கு என உறுதிசெய்யப்படுகிறது. இவ்வாறு கொரோனா உறுதிசெய்யப்படுபவருக்கு அடுத்த பரிசோதனைகள் நடத்தப்படும்.

அப்படி அல்லாமல் கொரோனா தொற்று இல்லை நெகட்டிவ் என்று வந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு சளி, இருமல், தும்மல், முத்துதிணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவருக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தற்போது முதற்கட்டமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 1000 கருவிகள் வந்துள்ளதாகவும், மேலும் கருவிகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close