நேருக்கு நேர் மோத இருந்த இரு விமானங்கள்:200 அடி இடைவெளியில் பயணிகளின் உயிர் தப்பியது!
பெங்களூரு வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி கொள்ள இருந்த விபத்து தக்க நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் அதாவது ஜூலை 10 ஆம் தேதி நடந்ததாகவும், இந்த தகவலை இண்டிகோ விமான நிறுவன செய்தி தொடர்பாளர் உறுதிசெய்துள்ளார்.
விபத்து தவிர்க்கப்பட்டதால் மொத்தம் 330 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
கோவையிலிருந்து ஐதராபாத்திற்கு சென்ற விமானமும் பெங்களூரிலிருந்து கொச்சிக்கு சென்ற விமானமும் தான் விபத்துக்குள்ளாக இருந்ததாக தகவல்கள் வெளிவருகின்றன.
இவ்விரு விமானங்களுக்கும் இடையே செங்குத்து இடைவெளி என்பது வெறும் 200 அடிகள் மட்டுமே இருந்ததாகவும் விமானம் மோதல் தடுப்பு சிஸ்டம் அலாரம் சரியான நேரத்தில் ஒலிக்க தொடங்கியதால் பைலட்டுகள் சுதாரித்துக்கொண்டு மோதலை தவிர்த்துள்ளனர் இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விமான விபத்து புலனாய்வு வாரியம் தனது விசாரணையை தொடங்கி உள்ளது.