HealthTamil News
15 நாளில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி சீரக வழி!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
சீரகப் பொடி மற்றும் தேன்: 1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
சீரக தண்ணீர்: 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்