fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

பீகார், உ.பி.யில் மழை, மின்னல் தாக்கி 107 பேர் பலி..! பிரதமர் மோடி இரங்கல்!

107 causalities in Bihar and Uttar Pradesh due to heavy rain

பாட்னா:

பீகாரில் மின்னல்தாக்கி 83 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்.

பீகாரில் அதிகபட்சமாக கோபால்கஞ் என்னும் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 23 மாவட்டங்களில் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மின்னல்தாக்கி சிலர் உயிரிழந்துள்ளனர்.

ஜூன் 22ம் தேதி பீகார், அசாம் மாநிலங்களில் வெள்ள அபாயம் ஏற்படலாம்,  அம்மாநிலங்களில் உள்ள நதிகளின் நீரோட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளது என்று தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் மின்னலால் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்தேன். பேரழிவில் அன்புக்குரியோரை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close