fbpx
REஅரசியல்உலகம்

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி அமைகிறது!

டாக்கா:

வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இங்கு மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில், 1,848 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கூட்டணி, அரசு அமைப்பதற்கு தேவையான 151க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது என உள்ளூர் தொலைக்காட்சியான சேனல் 24 அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் நள்ளிரவு தகவலின்படி அவாமி லீக் கூட்டணியானது 191 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது.

இதனால் ஷேக் ஹசீனா 3வது முறையாக ஆட்சி அமைபார்  என கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close