fbpx
REஅரசியல்இந்தியா

மாணவர்கள் அனைவரும் கொலைகாரர்களாக மாறவேண்டும்:உபி துணைவேந்தரின் பொறுப்பற்ற பேச்சு!

மாணவர்களே, உங்களுக்குள் சண்டை சச்சரவு வந்தால் என்னிடம் பஞ்சாயத்துக்கு வரவேண்டாம், முடிந்தால் கொலை செய்யுங்கள் என பல்கலை துணைவேந்தர் ஒருவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பூர்வாஞ்சல் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜா ராம் யாத்வ்
சமீபத்தில் விழா ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசிய பூர்வாஞ்சல் பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜா ராம் யாதவ்,

‘மாணவர்களே, உங்களுக்குள் சண்டை வந்தால் சண்டையை துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள், அழுது கொண்டே என்னிடம் பஞ்சாயத்துக்கு வராதீர்கள். உங்கள் எதிரியை அடியுங்கள், முடிந்தால் கொலை கூட செய்யுங்கள், அதன்பின் வருவதை பார்த்து கொள்ளலாம் என்று விஷ கருத்தை கூறியது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு நல்லொழுக்கம் போதிக்க வேண்டிய ஒரு துணை வேந்தரே, மாணவர்களை கொலை செய்ய தூண்டுவது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

யோகி அரசு என்ன செய்கிறது என்று பார்க்கலாம்.

Related Articles

Back to top button
Close
Close