fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

“மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலியில் “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஞாயிற்று கிழமை தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று அதன் 51-வது பகுதியை தொடங்கியது.

அதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி”மன் கி பாத்” என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்து கொண்டு மக்களுடன் பேசினார் அதில் ;

இந்தியாவில் மக்கள் வறுமையிலிருந்து வேகமாக மீட்கப்படுகிறார்கள் என்பதை உலக நிறுவனகள் அங்கீகரிக்கின்றனர். 2018-ஆம் ஆண்டில் தான் உலகின் மிகப்பெரிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்து விட்டது என்று கூறியுள்ளார்.

சென்னை மருத்துவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சமூக நலத்திற்காக பாடுபட்டுள்ளார். வயதான முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்க செல்லும்போது , பயண செலவிற்குகூட பணம் வாங்கியது இல்லை. இதே போல் கர்நாடகாவை சேர்ந்த நரசம்மா போன்றோர் 15,000 ஏழை பெண்களுக்கு பிரசவம் பார்த்து சேவை புரிந்துள்ளார்.

மேலும் விவசாயத்தை சார்ந்துள்ள மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன். பண்டிகைகலாம் என்பதால் அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து அதன் மூலம் நம் இந்தியாவின் கலாச்சாரத்தை அனைவரும் காணமுடியும்.

பின் அடுத்த மாதம் நடக்க இருக்கும் குடியரசுதின விழாவில் தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்று நரேந்திர மோடி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close