fbpx
Tamil News

பொதுமக்கள் பதட்டம் – 2 அடி வேற்றுகிரகவாசி நடமாட்டத்தால் பரபரப்பு !!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 2 அடி குள்ள நபர் இரவில் நடமாடிவருவதால் மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர். இந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு அந்த குள்ள நபர் அடிக்கடி வந்து செல்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2-ஆம் தேதி சோள பயிர் விவசாயியான கருணாதிலக்க என்பவர் தன் பயிர் பாதுகாப்பிற்காக வயல்வெளிக்கு சென்றபோது அங்கு குள்ள மனிதரை பார்த்ததும் பயத்தில் வீட்டிற்கு ஓடியுள்ளார். பின்னர் அருகில் இருந்த மற்ற விவசாயிகளை அழைத்துக்கொண்டு வந்து பார்த்தபோது அந்த குள்ள மனிதன் மாயமாகியுள்ளார்.

இதுபற்றி அந்த விவசாயி கூறியதாவது;

நான் கடந்த 2-ஆம் தேதி பயிர் பாதுகாப்பிற்காக சென்றேன். அப்போது அங்கு ஒரு வினோத சத்தம் கேட்டது. நான் என்னிடம் இருந்த டார்ச் லைட் அடித்து பார்த்தபோது 2 அடியில் ஒரு குள்ள நபர் இருப்பதை பார்த்தேன். தலைமுடி நீளமாக காணப்பட்டது. முகம் சிவப்பு நிறமாகவும், உள்நோக்கி சென்றது போன்று காணப்பட்டது.அந்த மனிதனின் உதடுகளும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது.

நான் டார்ச் லைட்டை அந்த மனிதனின் முகத்தில் அடித்து சத்தமிட்டேன். அந்த நபர் சிறிதும் நகரவில்லை.பின்னர் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டேன். பின் அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்து பார்த்தபோது அந்த நபர் காணவில்லை.ஆனால் அந்த குள்ள மனிதன் வந்து சென்றதற்கான அடையாளங்கள் இருந்தது.

இதேபோல் சில மாதங்களுக்கு முன் அனுராதபுரத்தின் பொலநறுவை பகுதியில் வெளிச்சமான பொருள் ஒன்று தரையிறங்கியதாக செய்திகள் வெளியாகி இருந்தது.இது குறித்து ஆராந்த அதிகாரிகள் அது பறக்கும் தட்டாக இருக்கலாம் என தெரிவித்தனர். இந்நிலையில் குள்ள மனிதன் தொடர்பாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close