fbpx
REஅரசியல்தமிழ்நாடு

புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவரா நீங்கள்? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்!!

5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு இடங்களில், வசித்து வரும் ஏழை – எளிய மக்களுக்கு, பட்டா வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏழை – எளிய மக்கள், 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபணை இல்லாத இடங்களில், வசித்து வந்தால் அவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான அரசாணையை, தமிழக அரசு, இன்று வெளியிட்டு உள்ளது. இதன்படி, பட்டா பெறும் குடும்பங்கள், ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசித்திருக்க வேண்டும்.

அனைத்து விதமான நீர் நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் குடியிருப்பவர்கள், பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலான குழுவினர் சரிபார்த்து, பின்னர் பட்டா வழங்குவார்கள்.

அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும். இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close