fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

பிரதமர் பதவிக்கு போட்டிபோடவும் இல்லை ; பிரதமர் ஆகும் ஆசையும் இல்லை – சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசத்திற்கு சிறந்த மதிப்பும் , கூடுதல் நிதியுதவி ஒதுக்கீடும் செய்யாததால் தெலுங்கு தேசத்தின் தலைவரும் ,அந்திரமுதல்வருமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசான பா.ஜனதாவிற்கு எதிர்க்கும் வகையில் களம் இறங்கியுள்ளது.

ஒரு ஆங்கில பத்திரிகைக்கு சந்திரபாபு நாயுடு பேட்டியளித்தபோது கூறியதாவது;

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு பெரிய பிரதான எதிர்க்கட்சியாக திகழ்கிறது. தேர்தலில் நாங்கள் கூட்டணி சேர்ந்துள்ளோம்.பா.ஜனதா மற்றும் தெலுங்கானா கட்சியை எதிர்க்கும் வண்ணமே இந்த கூட்டணி உருவெடுத்தது.

கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் பா.ஜனதாவின் ஆட்சியை கலைக்கும் வகையிலும்,அம்மாநிலத்தின் உரிமையை காக்கும் வகையிலும் அக்கட்சியை எதிர்க்க சக்திவாய்ந்த கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் சேர வேண்டும். கடந்த 4 வருடங்களாக பா.ஜனதாவின் ஆட்சியை எதிர்க்கும் வகையில் எந்த கட்சியும் வலுப்பெறவில்லை. எனவே நாங்கள் வலுபெறவே கூட்டணி செர்ந்துள்ளோம்.

காங்கிரஸ் தலைவர்களிடேயே ஒற்றுமை இல்லை.ஆனால் பணபலத்தாலும் , வாக்குப்பதிவு எந்திரங்கலில் செய்த தில்லுமுல்லு செய்ததாலும் சந்திரசேகர ராவ் வெற்றிபெற்றார்.

தற்போது நடக்கஇருக்கும் பாராளுமன்ற தேர்தல்கள் நேர்மையாகவும்,நியாயமாகவும் நடந்தால் பா.ஜனதா கட்சி வெற்றிபெற முடியாது.

பாரதீய ஜனதா அல்லாத கட்சிகள்தான் ஆட்சிக்கு வரும்.ஆனால் அது காங்கிரஸ் கூட்டணியாகவும் இருக்கலாம் , அல்லது காங்கிரஸ் ஆதரவு உள்ள கட்சியாகவும் இருக்கலாம். ஆனால் எப்படி இருந்தாலும் பாரதீய ஜனதாவால் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாது.

எனக்கு பிரதமர் பதவியின் மேல் ஆசையும் இல்லை , நான் அந்த பிரதமர் பதவிக்கு போட்டியிடவும் மாட்டேன்.ஆனால் தேர்தலில் கூட்டணி கட்சிகள் பெரும் தொகுதிகளின் அடிப்படையிலேயே பிரதமர் பதவி யாருக்கு என்று முடிவு செய்யப்படும். என்று அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close