fbpx
RETamil News

தொடர்மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரிப்பு

சென்னையில் இன்று காலை முதல் மழையானது நின்றுவிட்டது. இருந்தாலும் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நான்கு முக்கிய ஏரிகளின் நீர்மட்டமானது உயர்ந்துஉள்ளது.

அந்த நான்கு நீர் தேக்கங்களில் ஒருங்கிணைந்த சேமிப்பின் மொத்த கொள்ளளவானது 11,257 மில்லியன் கனஅடிக்கு 4091 கனஅடியாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் அந்த ஏரிகளின் மொத்த சேமிப்பானது 1,694 -ஆக இருந்தது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

செங்குன்றம், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய மூன்று ஏரிகளுக்கும் வினாடிக்கு 2000 கனஅடி நீரானது வந்துகொண்டுள்ளது.இதே நிலை தொடர்ந்தால் நீர் சேமிப்பு மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னையை அடுத்து ஆவடி பருத்திப்பட்டு , பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி மற்றும் கீழ்கட்டளை எரியும் நிரம்பி வருகிறது போன்ற ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்களின் நீர்களின் தேவை கோடைகாலங்களில் மிகுந்த அளவில் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close