fbpx
Tamil News

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலையுடன் நிறைவடைந்தது தேர்தல் பிரச்சாரம்

இந்திய முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. முதல் கட்டமாக 91 தொகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதேபோல் இரண்டாவதுகட்ட தேர்தலானது 13 மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கு வருகின்ற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

நடக்கருக்கும் இந்த தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதகாலமாக ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த தேர்தலில் ஆ.தி.மு.க கூட்டணி மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் விதிமுறையின் படி , வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்துக்கு 48 மணி நேரம் முன்பாக தேர்தல் பிரச்சாரமானது நிறுத்தப்படவேண்டும். வரும் 18-ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவானது மாலை 6 மணிக்கு நிறைவடையும். அதன் அடிப்படையில் 48 மணி நேரத்துக்கு முன்
அதாவது இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் பிரச்சாரமானது நிறைவடைந்தது.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவானது வரும் 18-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரமானது நிறைவடைந்துள்ளது. இவ்வாறு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தபின் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொது கூட்டத்தையோ , ஊர்வலத்தையோ ஒருங்கிணைக்கவோ அல்லது அதில் பங்கேற்கவோ கூடாது.

எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம் , தொலைக்காட்சி, எப்.எம் , ரேடியோ ,வாட்சப் , டுவிட்டர் போன்றவற்றின் மூலமாகவோ அல்லது எந்த ஒரு சாதனத்தின் மூலமாகவோ பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது.

பொது மக்களில் எந்த ஒரு நபரையும் ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சியையோ அல்லது எந்த ஒரு நிகழ்ச்சியையோ நடத்த கூடாது. மேலும் வெளி நபர்கள் தொகுதியிலிருந்து வெளியேற வேண்டும்.

இந்த விதிமுறைகள் எந்த விதத்திலும் மீறப்பட்டாலும் மக்கள் பிரதிநீதித்துவ சட்டப்பிரிவின் 126-ன் படி இரண்டு வருட சிறை அல்லது அபராதம் அல்லது எவை இரண்டுமோ சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close