fbpx
Tamil News

தமிழகத்தில் 6 மணி வரை ; 69.55% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

இன்று காலை முதலே தமிழகத்தில் வாக்குப்பதிவானது தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது;

தமிழகத்தில் 6 மணி வரை உள்ள நிலவரப்படி 69.55% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. சில வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருவதால் அதன் தகவல்கள் பிறகு தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலில் 71.62%வாக்குப்பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் தேர்தலின் போது எந்தவித இன்னல்களோ அல்லது சட்ட ஒழுங்கு பிரச்சனைகளோ எந்த இடத்திலும் ஏற்படவில்லை.

மக்களவை தேர்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவானது நாமக்கல்லில் 78%மாக பதிவாகியுள்ளது.மேலும் சிதம்பரத்தில் 76.03%, கள்ளகுறிஞ்சியில் 75.18%, வாக்குப்பதிவாகியுள்ளது.

குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05% வாக்குப்பதிவாகியுள்ளதால் தற்போதுள்ள சூழ்நிலையில் மருவாக்குபதிவிற்கு வாய்ப்பில்லை எவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close