fbpx
RETamil Newsதமிழ்நாடு

சென்னையில் டாக்டர் ஒருவர் பலி – தமிழகத்தில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

உயிர்கொல்லி நோயாக கருதப்படுகின்ற கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் தற்போது பரவ தொடங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகின்ற இந்த கொரோனா தொற்று சில மாநிலங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

தமிழகத்தில் மட்டும் இதுவரை 1,477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு 15-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்த மருத்துவர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார் தீடிரென நேற்று அந்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்த அந்த மருத்துவர் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 55 வயதான டாக்டர் ஆவார். கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக பணியாற்றி வந்தவர்.

அப்போது அவருக்கு திடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவரை சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனால் அந்த மருத்துவரை கொரோனா வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அதுமட்டும் அல்லாமல் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி அவர்களையும் பரிசோதித்தனர். இந்த பரிசோதனையில் 26 வயதான அவரது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் அவரது மகளும் வாநகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்த அந்த மருத்துவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தீடிரென நேற்று அந்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்த முதல் மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close