கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா மண்டபம் தர மறுப்பா..? எழுந்த சர்ச்சை…!
Rajinikanth explains about ragavendra mandapam

சென்னை: கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா திருமண மண்டபத்தை தர முடியாது என்று கூறியதாக பரவிய செய்திக்கு ரஜினி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகளவாக சென்னையில் பாதிப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது.
மருத்துவமனைகள் நிரம்பி விட்டதால், சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் சென்னை வர்த்தக மையம் கொரோனா வார்டாக செயல்பட துவங்கியுள்ளது.
மேலும் பல கல்லூரிகள், திருமண மண்டபங்களும் கொரோனா வார்டுகளாக மாற்றப்படுகின்றன. இந் நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், தர முடியாது என அவரது மனைவி லதா ரஜினிகாந்த கூறியதாக செய்தி பரவியது.
இது சமூக வலைத்தளங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ரஜினி தரப்பு இந்த செய்தியை மறுத்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் மண்டபத்தை கொரோனா பணிகளுக்காக எடுத்துக் கொள்ளலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.















