fbpx
REதமிழ்நாடு

காவிரி மருத்துவமனை காவல்துறையின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

சென்னை:

சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால்  பதற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆயுதப்படை போலீசாரும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு 2வது நாளாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை திடீரென கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வாசலில் காத்துக்கிடக்கின்றனர். இதனால் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகர துணை ஆணையர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவிரி மருத்துவமனைக்கு இணை ஆணையர் அன்பு வருகை தந்துள்ளார். அனைத்து ஆயுதப்படை போலீசாரும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையிலும் அதிகளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குவிந்து வரும் மக்களை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியிலும் போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர். ஜெமினி மேம்பாலம் அருகே துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close