fbpx
HealthTamil News

எண்ணற்ற நன்மைகளை பரிசளிக்கும் கற்றாழை!

நாம் உபயோகிக்கும் கற்றாழை தாவரம் நமக்கு எண்ணற்ற நன்மைகளை பரிசளிக்கிறது. எல்லா வகையான சரும நன்மைக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது. இது மட்டுமல்லாமல் நிறைய மருத்துவ குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது.

கற்றாழை இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இதனால் இதயத்திற்கு தூய்மையான இரத்தம் கிடைக்கிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால் நமது இதயம் ஆரோக்கியமாக துடிக்க உதவுகிறது.

இதில் ஆன்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள் என்று எல்லா பண்புகளும் இந்த ஓரே பொருளில் ஒரு சேரக் கிடைக்கின்றன. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

நீங்கள் கற்றாழை ஜூஸை பருகினால் போதும் நமது உள்ளுறுப்புகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை எளிதாக சுத்தப்படுத்துகிறது. இதனால் நமது உடல் உறுப்புகளும் நன்றாக வேலை செய்கிறது. கற்றாழை கீழ்வாத நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளது. இதிலுள்ள அமினோ அமிலமான பிராடிகைனாஸ் மூட்டுகளில் ஏற்படும் அழற்சியை சரி செய்கிறது. மேலு‌ம் இதுள்ள சாலிசைலிக் அமிலம் மூட்டுகளில் அழற்சி உண்டாகாமல் போரிடுகிறது.

கற்றாழை நமது உடலுக்கு தேவையான 8 முக்கியமான அமினோ அமிலங்களை கொண்டு இருக்கிறது. இந்த அமினோ அமிலங்கள் கிடைத்தால் போதும் நமது உடல் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் செயல்படும். நாம் சில நேரங்களில் உணவு உண்ட பிறகு அமிலத் தன்மை பிரச்சினையால் அவதிப்படுவோம். அந்த நேரங்களில் இந்த கற்றாழையை பயன்படுத்தினால் போதும் இவை வயிற்றில் அல்கலைன் தன்மையை உருவாக்கி pH அளவை சமன் செய்து விடும்.

கற்றாழை ஜெல்லில் உள்ள பாலிசாக்ரைடுகள் மைக்ரோபேஜஸ் அதாவது இரத்த வெள்ளை உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதனால் நம்மால் எந்த நோயையும் எதிர்த்து போராட முடியும்.

கற்றாழை நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு செல்களை கரைக்கிறது. மேலும் உடலின் மெட்டா பாலிசம் மற்றும் சீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நம்மால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும். இதனுடன் உடற்பயிற்சி மேற்கொள்வது இன்னும் நன்மை பயக்கும்.

Related Articles

Back to top button
Close
Close