fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

எச்.டி.எப்.சி வங்கி கேரளாவிற்கு 10 கோடி நிவாரண நிதி!

வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு எச்டிஎப்சி வங்கி ரூ. 10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

வரலாறு காணாத கனமழையினால் பேரழிவை கண்ட கேரளாவிற்கு பல நாடுகளிலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

அதுமட்டுமின்றி அவரவர் விருப்பத்தின் படி பல்வேறு நிறுவன ஊழியர்களும், பள்ளிகளும், கல்லூரிகளும், பல அமைப்பினரும் கேரளாவிற்கு நிதி உதவி மற்றும் பொருளுதவிகளை செய்துவருகின்றனர்.

மாநிலத்திற்கு முப்பதாயிரம் கோடி ரூபாய் வரையில் இழப்பு நேரிட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்ய பல்வேறு தரப்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி ரூ.10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

இதில் வங்கி ஊழியர்களும் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 30 கிராமங்களை தத்தெடுப்பதாகவும் அறிவித்துள்ளது.

கிராமங்களை தத்தெடுப்பதின் பகுதியாக வங்கி, கிராமங்களில் மருத்துவ முகாம்களை அமைத்தல், மருத்துவ மையங்களை மறு கடட்மைப்பு செய்தல், பள்ளிகளுக்கு ஆதரவு அளித்தல், புனர்வாழ்வு மற்றும் புனரமைத்தல், வாழ்வாதாரங்களை மீளமைப்பதற்கான திறன்களை வழங்குதல் ஆகிய அனைத்தையும் சரியான முறையில் செய்துகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பேரிடர் காலத்தில் கேரள மக்களுடன் நாங்கள் இருக்கிறோம்,” என வங்கியின் இயக்குநர் ஆதித்யா புரி கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close