RETamil Newsதமிழ்நாடு
வடசென்னை ஆர்.கே. நகரில் குப்பை தொட்டியின் ஓரமாக இறந்த நிலையில் பச்சிளம் சிசு ??
சென்னை ஆர்.கே. நகரில் குப்பைத் தொட்டி ஓரமாக பச்சிளம் சிசு வீசியெறியப்பட்ட துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை, நேதாஜி நகர் 6 ஆவது தெருவில் உள்ள குப்பைத் தொட்டியின் அருகே தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.நகர் போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 4.45 மணிக்கு இரண்டு பெண்கள் குப்பைத் தொட்டியை நோக்கி வருவதும், அவர்களில் ஒரு பெண், அவர் வைத்திருந்த பைக்குள் சிசுவை வைத்துக் கொண்டு வருவதும் பதிவாகி உள்ளது. இந்தப் பெண்கள் யார் என்பது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.