முட்டை வறுவல் (egg masala ) :
தேவையான பொருட்கள்:
முட்டை – 6 (வேக வைத்தது )
வெங்காயம் – 2 நறுக்கியது
காய்ந்த மிளகாய் – 5
சீரகம் – 1 டீஸ்பூன்
உளுந்து – 1டீஸ்பூன்
கறிவேப்பிலை – கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
கொத்துமல்லி – நறுக்கியது
எண்ணெய் – 2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் முட்டைகளை போட்டு, மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின்னர் நன்றாக வெந்ததும் அதனை ஆற வைத்து முட்டையின் மேலிருக்கும் ஓடுகளை நீக்க வேண்டும்.
சீரகம், உளுந்து, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது நேரம் வருத்து எடுத்து கொள்ளவும். இதனை ஆறவைத்து பின், பவுடர் பதத்தில் அரைத்து கொள்ளவும்.
வேக வைத்த முட்டைகளை நீல வாக்கில் இரண்டாக வெட்டிக்கொள்ளவும். அதன் மீது மசாலா பவுடரை தடவி வைத்து கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும். பொன்னிறமாக மாறியதும் பின் அதில் மசாலா தடவிய முட்டைகளை சேர்த்து பதமாக கிளறவும். லேசான தீயில் முட்டையை இரண்டு பக்கமும் பிரட்டி போட்டு கிளறவும். பின் 5 நிமிடம் ஆனதும் கொத்துமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறலாம். சுவையான முட்டை மசாலா தயார்.
வெஜிடபிள் புலாவிற்கு பரிமாறி சாப்பிடலாம். அருமையாக இருக்கும்!