fbpx
Tamil Newsஉணவு

மஷ்ரூம் பெப்பர் ப்ரை!

தேவையான பொருட்கள்:

காளான் – 250 கிராம் நீளவாக்கில் நறுக்கியது
மிளகுத் தூள் 1 டீஸ்பூன்
கொடமிளகாய் 1 நறுக்கியது
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 2 டீஸ்பூன்
வெங்காயம் 1 பெரியது நறுக்கியது
பூண்டு – 3 பல் சிறியதாக நறுக்கியது

செய்முறை:

சுத்தம்செய்யப்பட்ட காளானை நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். அது போலவே கொடைமிளகாவையும் நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். பின் அது பொன்னிறமாக மாறியதும் கொடைமிளகாவை சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாடை மறையும் வரை நன்றாக வதக்கவும்.

லேசான தீயில் காளானை சேர்த்து வதக்கவும். பின் வாணலியை மூடி போட்டு வைக்கவும். 5 நிமிடம் நன்றாக வேக வேண்டும். காளானில் தண்ணீர் விடும் என்பதால் நீர் சேர்க்காமல் சமைக்கவும். பின் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்.

சிறிய தீயில் 10 நிமிடம் வேக வைத்து பின் இறக்கி பரிமாறவும். சுவை மிகுந்த ஆரோக்கியம் நிறைந்த காளான் பெப்பர் ப்ரை தயார்.

Related Articles

Back to top button
Close
Close