புற்று நோயை தடுக்க ஆரோக்கிய உணவுகள் !!
உலகில் தற்போது அனைவராலும் கொடிய நோய் என்று சொல்லப்படும் புற்றுநோய்க்கு (கேன்சர் ) இதுவரை முழுமையான மருந்து என்று ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை.
உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மிக முக்கியமானது கேன்சர் எனும் புற்றுநோய். தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை, வயது வரம்பு இல்லாமல் எல்லா வயதினருக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நமது உணவு பழக்கத்தால் சில வியாதிகள் நமக்கு ஏற்படாமல் தடுக்க முடியும். அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் சில உணவுப் பொருட்கள் நம்மை புற்றுநோயில் இருந்து முற்றிலும் காக்கும் திறன் கொண்டவை.
புற்றுநோயிலிருந்து நம்மை காக்கும் உணவு வகைகள்:
மஞ்சள் :
மஞ்சளில் குர்குமின் எனும் வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த அலர்ஜி எதிர்ப்பு காரணியாகவும், ஆன்டி ஆன்சிடேடிவ் கொண்டதாகவும் உள்ளது. புற்றுநோயை உடலின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும். தினசரி நம் உணவில் மஞ்சள் சேர்ப்பதனால் தான் உலக அளவில் பெருங்குடல், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் குறைவாக உள்ளனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பூண்டு :
நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் பூண்டு மிக கொடிய நோயான புற்றுநோயை எதிர்க்கும் திறன் கொண்டது. இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், டியூமர் செல்களை அழிப்பதோடு, புற்றுநோயை எதிர்த்துப் போராடி உடலை பாதுகாக்கவும் சிறந்தது.
தக்காளி:
தக்காளியில் உள்ள காராடெனாய்ட்ஸ் மற்றும் லைகோபீன் புற்றுநோயை எதிர்த்து சண்டையிடுகிறது. குறிப்பாக கணையம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்க்கிறது.
ஃபோலேட் நிறைந்த உணவுகள்:
அவகேடோ, ஆப்ரிகோட், பூசணி மற்றும் பச்சை இலை காய்கறிகள், கோழியின் கல்லீரல் போன்றவை ஃபோலேட் நிறைந்த உணவுகளாகும். ஃபோலேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். பி9 அல்லது ஃபோலிக் அமிலம் உங்கள் உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். அதிலும், இயற்கை முறையில் ஃபோலேட்டை எடுத்துக் கொள்ளும் போது மட்டுமே புற்றுநோயை அது தடுக்கும்.
பச்சை இலை காய்கறிகள்:
இந்த வகை காய்கறிகளில் முள்ளங்கி, ப்ராக்கோலி, காலிப்ளவர், கிழங்கு வகைகள், முளைக்கட்டிய பயிறு வகைகள் உள்ளிட்டவை அடங்கும். இதில் சல்பராபேன் சத்து நிறைந்துள்ளது. இவை மார்பக புற்றுநோய், மூளை புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து போராடி உடலை காக்கிறது. அடர் நிற காய்கறிகளில் இன்டோல் 3 கார்பினால் அதிகமாக உள்ளது. இந்த இயற்கை சத்து, உடலில் புற்றுநோய் செல்களை வளர்க்கும் காரணிகளை அழிக்கிறது.
திராட்சை:
திராட்சை அனைவருக்கும் விருப்பமான புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையான பழம். இதை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டும், மற்ற ஆன்டி-ஆக்சிடன்ட் போலவே புற்றுநோய் ஏற்படாமலும், புற்றுநோய் உருவாகாமலும், அப்படி உருவானால் அதன் வளர்ச்சியை தடுக்கும். இதில் உள்ள சத்துக்கள் மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கக்கூடியது. சிவப்பு மற்றும் கருப்பு திராட்சை பழத்தின் தோலில் கூட அதிக சத்துக்கள் உள்ளன. கொட்டை இல்லாத திராட்சையை காட்டிலும், கொட்டை இருக்கும் திராட்சையை சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
நாம் அரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதினால் பல கொடிய வியாதிகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். கேன்சர் எனும் உயிர்கொல்லி நோயை விரட்டியடிக்கலாம்.