நீரிழிவும் ஆயுர்வேதமும்…
நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவமாக கருதப்படுவது “ஆயுர்வேத மருத்துவம்” தான். இது பல நன்மைகளை உடலுக்கு தருவதாக பல அறிஞர்களும் கூறுகின்றனர். சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும் ஆயுர்வேத மருந்துகளை பற்றி பார்ப்போம்.
துளசியும், வேப்பிலையும்:
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை இந்த இலைகளுக்கு உள்ளது. இவற்றின் சாற்றை சேர்த்து குடித்தால் இவை அருமையான மருந்தாக மாறும். 10 வேப்பிலை கொழுந்து இலைகள் மற்றும் 10 துளசி இலைகள் எடுத்து கொண்டு நன்கு அரைத்து அவற்றின் சாற்றை மட்டும் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரையின் அளவை குறைக்குமாம்.
பாகற்காய் சாறு:
சர்க்கரை நோயின் எதிரியாக கருதப்படுவது இந்த பாகற்காய்தான். ஏனெனில் இவை சர்க்கரை அளவை மிகவும் கட்டுக்கோப்பாக வைக்க உதவும். அத்துடன் ரத்தத்தை சுத்திகரித்து சுத்தமான ரத்தத்தை உடலுக்கு செலுத்தும். பாகற்காய் சாற்றை தினமும் 30 ml குடித்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும்.
நாவல் விதைகள், இலைகள் :
பொதுவாக இந்த நாவல் பழங்கள் நல்ல மருத்துவ குணம் கொண்டவை. அத்துடன் இவற்றின் இலைகள் மற்றும் விதைகள் கூட அற்புத தன்மை கொண்டதாம். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதன் இலைகளை மென்று சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும், இவற்றின் விதைகளை பொடி செய்து தினமும் 1 டீஸ்பூன் நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயை தீர்க்குமாம்.
வெந்தய விதைகள்:
வெந்தயம் ஒரு அருமையான மருந்தாகும். பல ஆயுர்வேத மருத்துவத்தில் வெந்தயத்தின் பயன்பாடு முதன்மையானதாக கருதப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முதல் நாள் இரவு முழுவதும் மிதமான நீரில் ஊற வைத்த வெந்தயத்தை, அடுத்த நாள் எடுத்து அரைத்து வடிகட்டி குடித்தால் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.