Others

நவம்பர் 24– திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2025!! அண்ணாமலையார் கோயிலில்  கொடியேற்றத்துடன் தொடக்கம்.... | Temples Stories Photogallery (கோவில்கள்  போட்டோகேலரி ...உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டு தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொங்கியது. தீபத்திருவிழாவுக்கானகொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்புஅபிஷேகம்,ஆராதனைகள்நடைபெற்றது.அதைத்தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்களுடன் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர்.பின்னர் காலை 6.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சுமார் 63 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர். அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்அண்ணாமலையாருக்குஅரோகராஎனபக்திமுழக்கமிட்டுதரிசனம்செய்தனர்.தீபத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றதையடுத்து, விழாவின் முதல் நாளான நேற்று காலை பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்களில் மாடவீதியில் வலம்வந்துபக்தர்களுக்குஅருள்பாலித்தனர். தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், வெள்ளி, அதிகார நந்தி, ஹம்சம்,சிம்ம வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி நடைபெற உள்ளது.பத்து நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவில் 6ம் நாள் விழாவாக வரும் 20ம் தேதி 63 நாயன்மார்கள் ஊர்வலமும், அன்று இரவு வெள்ளி ரத ஊர்வலமும் நடைபெறுகிறது.7ம் நாள் திருவிழாவாக வரும் 21ம் தேதி மகா ரதம் தேரோட்டம் நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய விழாவான தீபத்திருவிழா நவ.24ம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் சுவாமி சன்னதியில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.தீபத்திருவிழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்துஇந்தஆண்டுசுமார்50லட்சம்பக்தர்கள்கலந்துகொள்வார்கள்எனஎதிர்பார்க்கப்படுகிறது அதையொட்டிபோதியமுன்னேற்பாடுவசதிகள்மாவட்டநிர்வாகம்சார்பில்மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொடியேற்ற விழாவில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.கொடியேற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.உதயகுமார், முன்னாள் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, போளூர் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அபிஷேக், கோயில் தக்கார் உ.மீனாட்சிசுந்தரம், கோயில் இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close