fbpx
Tamil Newsஅரசியல்இந்தியா

13 முறை ஓவர் ஸ்பீட் , 13 முறை அபராதம் – அனைத்தும் ரத்து ; மகாராஷ்டிர முதல்வருக்கு சலுகை .

சாதாரண பொது மக்கள் சாலையில் கார்களில் அதிவேகமாக சென்றால் அபராதம் போடப்படும் , அதை கட்டாமல் தப்பிக்கவும் முடியாது. ஏனெனில் அதை சட்டம் அனுமதிக்காது.

ஆனால் நாம் ஒரு முதலமைச்சராக இருந்தால் , எந்த ஒரு அபராதமும் காட்டாமல் தப்பித்து கொள்ள முடியும் என்று சொல்கிறது இந்த சம்பவம். அப்படிபட்ட இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸுக்கு வேகம் என்றால் மிகவும் பிடிக்கும்.

அவ்வாறு தான் முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் தன் அலுவலக பணிகளை விரைந்து முடிபதில் ஆர்வம் காட்டுவார். அதே போல் தான் வீட்டிற்க்கு காரில் வேகமாக செல்வத்திலும் தவறமாட்டார்.இதற்காக மும்பை போக்குவரத்து போலீசார் , முதலமைச்சரின் வாகனத்திற்கு 13 முறை அபராதம் விதித்துள்ளனர்.

முதலமைச்சரின் வாகனத்திற்கு ஜனவரி 12, 2018 முதல் ஆகஸ்ட் 12, 2018 வரை பந்த்ரா வோர்லி கடல் இணைப்பு பாதையில் மட்டும் 13 முறை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளது.

இவையனைத்தும் போக்குவரத்து கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதனால் அந்த காரிற்கு 13 முறை மட்டும் ரூ.13000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனல் எவை அணைத்து போக்குவரத்து போலீசார் ரத்து செய்துள்ளனர். ஏனென்றால் இந்த சம்பவத்தை செய்தவர் மாநில முதலமைச்சர் என்பதாகும். எனவே இதிலிருந்து தெரிவது என்னவென்றால் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் , அதிகாரத்தில் இருபவர்களுக்கு ஒரு சட்டம் என்று தெளிவாக தெரிகிறது.

Related Articles

Back to top button
Close
Close