தெரிந்துகொள்வோம்!
பெட்ரோல் என்பது பெட்ரோலியம் என்ற கிரேக்க மொழிச்சொல்லில் இருந்து பிறந்தது. இதற்கு கல் எண்ணெய் என்று பொருள்.
வியர்வையில் கந்தகச்சத்து இருப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருத்து போய்விடுகின்றன.
‘ஈ’ ஒரு நிமிடத்தில் 2 ஆயிரம் தடவை இறக்கை அடித்து பறக்கிறது.
பாலைவனத்தில் வளரும் எல்லா செடிகளுக்கும் முட்கள் இருக்கும்.
கணிதத்தில் பூஜ்யத்தை சேர்த்தவர் – ஆர்யபட்டார்.
நானோமீட்டர் என்ற அளவை கண்டுபிடித்தவர் – ஆல்பர்ட் இன்ஸ்டினா
உலகின் மிகப்பெரிய கண்ணாடி சன்னல் நியூயார்க் நகரில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருப்பது தான். அதன் நீளம் 300 அடி. உயரம் 23 அடி.
அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர், ஆலன் ஷெப்பர்ட்(5.5.1961)
இந்தியாவின் முதல் விண்வெளி வீரர், ராகேஷ் ஷர்மா (3.4.1984)
இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை, கல்பனா சாவ்லா (19.11.2003)
ஒட்டகச்சிவிங்கியின் பின் கால்கள் தான் அதனுடைய தற்காப்பு ஆகும். இது ஆபத்து காலத்தில், இந்த கால் மூலம் ஓர் உதைவிட்டால், அந்த உதை ஒரு சிங்கத்தைக் கூடக் கொள்ளும் வலிமையுடையதாகும்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை அமைந்துள்ள இடம் – வண்டலூர்.