தினம் ஒரு அத்திப்பழம் !
ஆரோக்கியம் நிறைந்த அத்திப்பழத்தில் ஏராளமான நார்சத்தும், இரும்பு சத்தும் நிறைந்துள்ளது. வைட்டமின் ‘இ’, வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ள அத்திப்பழம் தினம் ஒன்று சாப்பிட்டு வர ஏராளமான நோய்கள் குணமடையும்.
உடலுக்கு தேவையான கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகள் வலுவடையும்.
மூட்டு பிரச்சனைக்கு தீர்வளிக்கும். இது ஒரு நாளைக்கு ஒருவருக்கு தேவையான 2% இரும்பு சத்தினை அளிக்கும். இதனால் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் (ஹீமோகுளோபின்) எண்ணிக்கையை அதிகரிக்கும்.
பெண்கள் உலர்ந்த அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியினை போக்கும் ஆற்றல் அத்திப்பழத்திற்கு உண்டு.
ஆண்கள் தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை 41 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
செரிமானத்தை அதிகரிக்கும் அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் 5% இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக்கும். மூலநோய் வராமல் தடுக்கும். குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.
ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
குழந்தைக்கு உலர்ந்த அத்திப்பழம் தினம் ஒன்று கொடுத்து வந்தால் பசி அதிகரிக்கும்.
வறட்டு இருமலை போக்கும்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் வராமல் பாதுகாக்கும்.