fbpx
Tamil News

டிசம்பர் 12-ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு

தனது பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்படாது, தாமதமாகும் என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

ஷங்கர் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 2 பாயிண்ட் ஓ படத்தில் இடம் பெற்றுள்ள 2 பாடல் வரிகளின் வீடியோ வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில், இந்த பாடல் வரி வீடியோக்கள் வெளியானது படம் மீதான மக்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

இந்நிலையில் பேட்ட படம்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டு வாரணாசியிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;

டிசம்பர் 12-ஆம் தேதி தனது பிறந்த நாளன்று கட்சி ஆரம்பிக்கவில்லை, அதே நேரத்தில் கட்சி தொடங்குவதற்கான 90% பணிகள் முடிவடைந்துவிட்டன.

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் காலம் காலமாக நாம் பின்பற்றி வரும் சம்பிரதாயத்தையும் ஐதீகத்தையும் மாற்றுவது சரியல்ல.

‘மீ டூ’  விவகாரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும், அதே நேரத்தில் பெண்கள் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது. பெண்களுக்கு  சம உரிமை  வேண்டும் என்பதில் மாற்று  கருத்து இல்லை என கூறி உள்ளார்

Related Articles

Back to top button
Close
Close