fbpx
Tamil Newsஉணவு

சேப்பங்கிழங்கு புளி கிழங்கு !

தேவையான பொருட்கள்:

சேப்பங்கிழங்கு -1/4 கிலோ அல்லது 5 சிறியவை
சாம்பார் வெங்காயம் -15-20
பூண்டு – 15-20
தக்காளி – 1 நறுக்கப்பட்ட
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 டீஸ்பூன்
புளி – சுமார் 20 கிராம்
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
சிவப்பு மிளகாய் – 1
கறிவேப்பிலை

செய்முறை:

முதலில் சேப்பங்கிழங்கை சுத்தமாக கழுவி பின் குக்கரில் 2 விசில் போட்டு வேக வைத்துக்கொள்ளவும். சேப்பங்கிழங்கு வெந்ததும் சிறிது நேரம் ஆற விட்டு தோலினை நீக்கி விடவும்.

ஒரு பாத்திரத்தில் புளியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும். சாம்பார் வெங்காயத்தை தோல் உரித்து வைத்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு அது பொரிந்ததும், வெந்தயம் போடவும். பின் காய்ந்த மிளகாய், பெருங்காயதூள், கறிவேப்பிலை சேர்க்கவும்.

பின் சாம்பார் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். கண்ணாடி போல் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் நன்றாக வதங்கியதும், சாம்பார் பவுடர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிது நேரம் நன்றாக கிளறவும். பின்னர் புளியை கரைத்து புளி தண்ணீரை அதில் சேர்க்கவும். பின்னர் 10 நிமிடம் கொதிக்க விடவும். இதனை தொடர்ந்து வேக வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்க்கவும். நன்றாக கொதிக்க வைத்து குழம்பு கெட்டி பதத்தில் வரும்போது நல்லெண்ணையை சேர்த்து சிறிது நேரம் கழித்து, எண்ணெய் மிதந்து மேலே வரும்போது இறக்கவும்.

அருமையான சுவை கொண்ட இந்த சேப்பங்கிழங்கு புளி குழம்பை சாதத்துடன் சாப்பிடலாம்.

Related Articles

Back to top button
Close
Close