சுவையான மைசூர் போண்டா!
மைசூர் போண்டா உளுத்தம்பருப்பு பயன்படுத்தி செய்யக்கூடிய சுலபமான சிற்றுண்டி ஆகும்
தேவையான பொருட்கள்:
முழு உளுத்தம்பருப்பு -100கிராம்
பச்சை மிளகாய் – 1
அரிசி மாவு – 50 கிராம்
முழு கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி
மெல்லிய வெட்டப்பட்ட தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறியதாக நறுக்கியது
கொத்தமல்லி இலைகள் – சிறியதாக நறுக்கியது
தேவையான அளவு உப்பு
செய்முறை:
உளுத்தம்பருப்பை 3 தடவை கழுவிக்கொண்டு ஊறவைக்கவும். 2 மணிநேரம் ஊற வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி பின்னர் மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளவும்.
மாவு அரைத்த பின் அதனுடன் அரிசி மாவு, முழு கருப்பு மிளகு, மெல்லிய வெட்டப்பட்ட தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து தயார் செய்து வைத்துள்ள மாவினை உருண்டைகளாக்கி போடவும். ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துக்கொண்டு கையை ஈரமாக்கி மாவினை கையில் உருண்டை பிடித்து எண்ணெயில் போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாகி நன்றாக வெந்ததும் மைசூர் போண்டாவை எடுத்துவிட வேண்டும்.
சுவையான மைசூர் போண்டா தயார். இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம். அருமையாக இருக்கும்.