சுவையான கோபி மஞ்சூரியன்!
தேவையான பொருட்கள்:
காலிபிளவர் 1
சோள மாவு 2 ஸ்பூன்
அரிசி மாவு 1 ஸ்பூன்
மைதா மாவு 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
சோயா சாஸ் 1 ஸ்பூன்
கலர் பவுடர் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
தயிர்
மிளகு தூள் 1 ஸ்பூன்
பூண்டு இஞ்சி கட் செய்தது
வெங்காயம் பெரியது 1
குடமிளகாய் 1
தக்காளி சாஸ் 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் காலிபிளவர் பூ எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை நறுக்கி சுடு தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதில் ஏதேனும் புழுக்கள் இருந்தால் அதனை நீக்கிவிட்டு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். பின்னர் மறு பாத்திரத்தில் சோள மாவு, மைதா மாவு மற்றும் அரிசி மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டி பதத்தில் கரைத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோயா சாஸ், தேவையான அளவு உப்பு மற்றும் கலர் பவுடர் அனைத்தும் சேர்த்து கலக்கவும். பின்னர் தயிர் சேர்க்கவும். பிறகு சுத்தம் செய்து வைத்திருந்த காலிபிளவரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். நன்றாக எண்ணெய் காய்ந்ததும் காலிபிளவரை பொரித்து எடுக்கவும். மொறுமொறுவென காலிபிளவர் பொரிந்ததும் அதனை ஒரு தட்டில் எடுத்து வைத்து விடவும்.
ஒரு வாணலியில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் நீலவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் குடமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் மிளகு தூள் சேர்த்து கிளறவும். பின்னர் சோயா சாஸ் 1 ஸ்பூன், சில்லி சாஸ் 2 ஸ்பூன், தக்காளி சாஸ் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கவும். சோள மாவை 1/4 டம்ளர் தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்த்து கிளறி விடவும். இறுதியாக பொரித்து வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து கிளறவும். பின் வெங்காய தாள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான காலிபிளவர் மஞ்சூரியன் தயார்.