சுவையான கடாய் மஷ்ரூம் மசாலா !
தேவையான பொருட்கள்:
காளான் – 200 கிராம்
வெங்காயம் – 1 கப்
குடமிளகாய் – 1 கப்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 1 கப் பொடியாக நறுக்கியது
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
தக்காளி – 1 கப்
தயிர் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கடாய் மசாலா தயார் செய்ய தேவையான பொருட்கள்:
தனியா – 2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 3-4
முழு கருப்பு மிளகு – 1/4 தேக்கரண்டி
கிராம்பு – 2
இலவங்கப்பட்டை – 1/2 அங்குல துண்டு
ஏலக்காய் – 2
பே இலை – 1
செய்முறை:
முதலில் காளானை சுத்தம் செய்து நீளவாக்கில் பாதியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு வெங்காயம் மற்றும் குடமிளகாயை சதுர வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.
2-3 தக்காளியை எடுத்துக்கொண்டு அரைத்து பேஸ்ட் ஆக்கிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். அதில் வெட்டிவைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். பொன்னிறமானதும் எடுத்து வெங்காயத்தை ஒரு தட்டில் வைத்துவிடவும். பின்னர் குடமிளகாயை எண்ணெயில் வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் கூடுதலாக எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் உள்ள தண்ணீர் போகும் வரை வதக்கி நிறம் மாறியதும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
கடாய் மசாலா தயாரிக்கும் முறை:
மற்றொரு கடாயில் தனியா, சீரகம், கருப்பு மிளகு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வறுக்கவும். நன்றாக வறுபட்டதும் அதனை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் பே இலை ஒன்றாக சேர்த்து வறுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்பு வறுத்து வைத்துள்ளவற்றை மிக்சியில் நன்றாக பொடியாகும் வரை அரைத்து வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து, சிறிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தக்காளி பேஸ்ட், மஞ்சள் பொடி, மிளகாய் தூள், கடாய் மசாலா தூள், ஆகியவற்றை சேர்த்து கிளறவும். 5 நிமிடம் ஆனதும் தயிர் சேர்த்து கிளறவும். மிதமான தீயில் வைத்து சிறிது நிமிடங்கள் நன்றாக கிளறவும். அதனுடன் எண்ணெயில் வதக்கி வைத்துள்ள குடமிளகாய், வெங்காயம் மற்றும் காளானை சேர்த்து 2 நிமிடம் வேக விடவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சிறு தீயில் வேக வைக்கவும். 10 நிமிடம் ஆனதும் சுவையான கடாய் மஷ்ரூம் கிரேவி தயார். இதனை சப்பாத்தி, நாண் மற்றும் பரோட்டா ஆகியவற்றிற்கும் வைத்தும் சாப்பிடலாம்.