சுருளி அருவியில் 2 நாட்கள் நடைபெறும் சாரல் திருவிழா– சிறப்பு செய்தி

*தேனி மாவட்டம் சுருளி அருவியில் 2 நாட்கள் நடைபெறும் சாரல் திருவிழாவை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சாரல் விழாவையொட்டி சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி இலவசம்* .தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பிரசித்தி பெற்ற சுருளி அருவியில் சாரல் திருவிழா இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இதனை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார், மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் ரிப்பன் வெட்டிதுவக்கிவைத்தனர்.மேலும் சுற்றுலா,செய்தி தொடர்பு துறை, வேளாண், தோட்டக்கலை, சமூக நலன் மற்றும் கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.சாரல் திருவிழாவையொட்டி இன்றும் நாளையும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்குச் செல்வதற்கான வனத்துறை சார்பில் வசூலிக்கப்படும் நுழைவுத் கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது .தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் மற்றும்பரதநாட்டியம், கிராமப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.சுற்றுலா பயணிகள் மாணவ மாணவியருக்கானவிளையாட்டுப்போட்டிகளும்நடத்தப்பட்டதுதொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் இது சாரல் விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சிகள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஇவ்விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் பள்ளி மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வார காலம் நடைபெற்று வந்த இந்த சுருளி சாரல் விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.மேலும் இந்த சுருளி சாரல் விழாவிற்கு அதிக அளவில் விளம்பரங்கள் இல்லாததால் பொதுமக்களின் வருகை எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
மேலும் இன்று நடைபெற்ற இந்த சுருளி சாரல் விழா நிகழ்ச்சியில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர்,நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எவரும் விழா சிறப்புரை நிகழ்த்தாமல் சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
