சளி, காய்ச்சலால் மக்கள் அவதி – தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலையின் மாற்றமே காரணம்.

தமிழகம் முழுவதும் மக்கள் சளி,காய்ச்சல் மற்றும் தொடைவலியால் அவஸ்தை பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாற்றமேயாகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் , மற்றும் அரசு மருத்துவமனைகளில் சென்று சிகிட்ச்சை பெற்றவண்ணம் உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை நவம்பர் மாதம் அனைத்து இடத்திலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னையை தவிர ராமேஸ்வரம்,கடலூர் நாகை போன்ற கடலோர மாவட்டங்களில் மலையின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
பின்னர் மழையை தொடர்ந்து வந்த புயலும் கடலோரப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு பெருமளவு மழையை கொடுத்தது. ஆனால் சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் இலேசான தூறலும், சில இடங்களில் கனமழையும் இருந்தது.எனவே கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் இந்த ஆண்டு மழையின் தாக்கம் குறைவாகவே இருந்தது.
ஆனால் தற்போது அனைத்து தமிழகத்திலும் மாலை 6 மணிக்கு துவங்கும் பனியின் தாக்கம் அடுத்த நாள் காலை 9 மணி வரையிலும் அதன் பின் வெயிலாகவும் இருக்கிறது.பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மாலை 6 மணிக்கே இருட்டாகி விடுகின்றது.மேலும் இரவு முழுவதும் குளிர் அதாவது பனி காற்று வீசி வருவதால் தொண்டைவலி, சளி என்று பல்வேறு காரணங்களால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
மாலை மற்றும் இரவில் பனியின் தாக்கம் அதிகமாகவும்,பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் உள்ளதால் இதில் அதிகமாக பாதிப்படைவது வேலைக்கு செல்பவர்களும் , பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் ஆவர். இவ்வாறு பனியின் தாக்கமும் , வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளதால் மக்கள் சளி,தொண்டைவலி , உடல்வலி ,காய்ச்சல் என்று பல்வேறு காரணங்களால் அவதிப்பட்டுவருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தட்ப வெப்பநிலையின் மாற்றமேயாகும். இந்த தட்ப வெப்பநிலை மாற்றம் வரும் பிப்ரவரி மாதம் வரை தொடரும் என்று தெரிகின்றது.















