கொள்ளையை தடுத்ததற்கு டி சர்ட் மட்டும் பரிசளித்த முதலாளியின்ரூ.70 லட்சம் பணத்தை சூறையாடிய வேலையாள்!!
டெல்லியில் வசிக்கும் பைனான்சியர் ஒருவரிடம் தன்சிங் பிஸ்த் என்பவர் வேலை பார்த்து வந்தார். அவர் தன் முதலாளி பைனான்சியர் கூறும் வாடிக்கையாளரிடம் இருந்து பணம் பெற்று அதை வங்கியில் செலுத்துவது தான் அவர் வேலை.
அவ்வாறு ஒரு முறை தன் முதலாளியின் ரூ.80 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்ற போது , கொள்ளையர்கள் அவரை வழிமறைத்தார்கள். எனினும் அந்த கொள்ளையர்களிடம் இருந்து அந்த பணத்தை காப்பாற்றுவதற்காக அவர் மிகவும் பாடுபட்டு சண்டை போட்டார். இவ்வாறு சண்டை போட்டதில் அவருக்கு காயமும் ஏற்பட்டது.
தன் முதலாளியின் பணத்தை பாதுகாத்து கொடுத்ததற்கு தனக்கு முதலாளி பெரிய பரிசு தருவார் என்று தன்சிங் எதிர்பார்த்தார். ஆனால் அவரின் முதலாளி அவருக்கு ஒரு டி சர்ட் மட்டும் பரிசளித்ததால் மிகவும் ஆத்திரப்பட்டார்.
அதனால் தன்சிங் மிகவும் வருத்தத்தில் இருந்தார். அவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மேலும் அவரின் திருமணத்திற்காக பணம் தேவையாக இருந்தது. ஆனால் கொள்ளையர்களிடம் இருந்து அந்த பணத்தை காப்பாற்றுவதற்காக அவர் மிகவும் பாடுபட்டு சண்டை போட்டார். இவ்வாறு சண்டை போட்டதில் அவருக்கு காயமும் ஏற்பட்டது.அதனால் அவரால் வேலைக்கு கூட போகமுடியவில்லை.
அதன்பின் தன் நண்பனிடம் இதுபற்றி தன்சிங் கூறியுள்ளார். தன் திட்டத்தையும் செயல்படுத்த ஆலோசித்தார்.அதன்படி முதலாளி பைனான்சியர் கூறும் வாடிக்கையாளரிடம் ஆகஸ்ட்-28-ஆம் தேதி பணம் பெற்று தன் நண்பரை தொடர்புகொண்டுள்ளார்.
தன் நண்பரின் உதவியுடன் தன்சிங் அந்த முதலாளியின் 70லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதனாலதான் வேலைக்கேத்த சன்மானம் கொடுக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும்.