கொரோனா வைரஸ் போர்க்களம் – அதை எதிர்கொள்ளும் மருத்துவர்களின் ஒரு அனுபவம்

உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று கொரோனா வைரஸ் என்ற கொடிய உயிர்கொல்லி நோயால் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். சிலர் மனதளவிலும் சிலர் உடலளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
முக்கியமாக உலகளவில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸ் மருத்துவ பணியாளர்களை பாதிக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது.
பல மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் இந்த போராட்டத்தில் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்காணிக்கும் மருத்துவர்கள் முறையான பாதுகாப்பு கவசங்களை அணியவேண்டும். ஆனால் பலர் சரியான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தங்களின் உயிருக்கு ஆபத்து வரலாம் என்ற பயத்தின் மத்தியில் தான் அவர்கள் தங்களின் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இது அவர்களிடம் மனதளவில் பெரும் அழுத்தத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தங்களின் சொந்த குடும்பத்தாரிடம் பழகும் விதத்திலும் கூட மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.
உலக அளவில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் பல மருத்துவ பணியாளர்கள் இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கொரோனாவால் அதிக அளவில் பாதிப்படைந்த நாடாக உள்ள அமெரிக்கா, இத்தாலி, இஸ்பெயின் போன்ற நாடுகளில் உள்ள மருத்துவ பணியாளர்களிடம் பேசிய போது அவர்கள் கூறியதாவது;
மருத்துவ பணியாளர்களாக இருக்கும் நாங்கள் இந்த தொற்றை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம் எனவே இந்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு எங்களுக்குத்தான் அதிகம் உள்ளது,
நாங்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருந்தாலும் அது ஒரு அளவுக்கு தான் பலனளிக்கும்.
நான் எனது கணவருடன் வசிக்கிறேன் அவரும் covid-19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெரும் வார்டில் தான் பணிபுரிகிறார். எனவே எங்களில் இருவரில் யாருக்காவது இந்த தொற்று எளிதில் வர வாய்ப்புகள் அதிகம்.

இவ்வாறு ஆபத்து நிறைந்த பணியில் தான் நாங்கள் வேலைபார்த்து கொண்டுள்ளோம் அதுவே எங்களுக்கு ஒரு பெரிய மனஅழுத்தத்தை தருகிறது.
இந்த கொரோனா வைரசால் நங்கள் முன்பை காட்டிலும் அதிக அளவில் பணியில் வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எங்கள் விடுமுறைகளும் ரத்தாகிவிட்டது. இவ்வாறு மனஅழுத்தம் மிகுந்த சூழலிலும் நாங்கள் பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

முதலில் எங்களுக்கு அதிக அளவில் மாஸ்க்குகள் வழங்கப்பட்டன அதை நாங்கள் உபயோகித்து பின்னர் தூக்கியெறிந்து விடுவோம். ஆனால் நிலைமை மோசமானதால் எங்களுக்கு தர வேண்டிய மாஸ்க்குகளின் அளவுகள் குறைக்கப்பட்டன எனவே கையில் இருக்கும் மாஸ்குகளை மீண்டும் பயன்படுத்தும் நிலைமைக்கு ஆளாகியுள்ளோம்.
என்னால் என் கணவருக்கும் இந்த தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் நான் தனியாக வசிக்க ஆரம்பித்துள்ளேன்.
இந்த நிமிடம் வரை எனக்கு மாஸ் மற்றும் ஒரு முறை பயன்படுத்தும் பாதுகாப்பு உடை கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால் பிற மருத்துவமனைகளில் செவிலியர்கள் இம்மாதிரியான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணிபுரியும் சூழல் அமைந்துள்ளது.
இந்த நோயால் ஏற்படும் தீவிரத்தை நாங்கள் கண்முன்னே பார்க்கிறோம் எப்படி எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியும்.
நான் தனியாக வசிக்கிறேன் ஆனால் குடும்பத்துடன் வசிக்கும் எனது சகபணியாளர்கள் தங்கள் வீட்டுக்குள்ளேயே தங்களை தானே தனிமை படுத்தி கொள்கின்றனர்.
எங்கள் பணியில் எந்த வித்தியாசமும் இல்லை , ஆனால் எல்லாம் தாமதமாகும்.

ஏனென்றால் பாதுகாப்பு கவச ஆடை அணிய அதிக நேரம் பிடிக்கும் மாஸ் மற்றும் கையுறைகல் என எல்லாம் அணிந்து கொண்டு ஒரு போர்க்களத்திற்கு செல்வது போல் தயாராகவேண்டும். எங்கள் கண்களையும் மறைத்துக்கொள்ள வேண்டும்.
எங்கள் உடல் முழுவதும் ஆடையாக இருக்கும் ஆறு மணி நேரம் வரை பணியில் இருந்த பிறகுதான் அதை கழற்ற வேண்டும். அதுவரை உணவு சாப்பிடவோ, குடிநீர்குடிக்கவோ அல்லது கழிவறைக்குக்கூட செல்லவே முடியாது.
அதனால் நாங்கள் போர்க்களத்தில் பணிபுரியும் மருத்துவர்களை போல் உணருகிறோம்.
நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை யோசிக்கக்கூட எங்களுக்கு நேரம் இருக்காது. நீங்கள் ஒரு அவசர சூழலில் இருக்கும் போது யோசிக்க மாட்டீர்கள் உடனே செயலாற்ற தொடங்கிவிடுவீர்கள் அதை தான் நாங்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.















